சீன ராணுவத்தினர் ஃப்ராங்க் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோங்குரா நாலா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல்-மே மாதம் முதற்கொண்டு அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சீனா நிறுத்தாவிட்டாலும், நமக்கான வாய்ப்புகள் திறந்தே இருக்கின்றன - முப்படைத் தளபதி - கல்வான் பள்ளத்தாக்கு
டெல்லி: சீன ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை நிறுத்திக்கொள்ளாவிட்டால், நமது ராணுவத்தினருக்கான வாய்ப்புகள் திறந்தே இருக்கின்றன என முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், எல்லைப்பகுதிகளில் நிலவிவரும் பதற்றத்தைக் குறைப்பதற்காக இரு நாட்டு ராணுவ அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஆனால், இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இது குறித்து பேசுகையில், “ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால், சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள நமது படையினர் தயாராக உள்ளனர். ஆகவே நமக்கான வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.