மோசமான பருவநிலை காரணமாக, இந்திய எல்லை கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவத்தினர் மீட்டனர். இதனையடுத்து, அவருக்கு மருத்துவ உதவி, ஆக்ஸிஜன் அளித்தனர். பின்னர் அவருக்கு உணவும், கடும் குளிரிலிருந்து காக்கும் உடையையும் இந்திய ராணுவத்தினர் வழங்கினர்.
இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு! - சீனா இந்தியா எல்லை பிரச்னை
08:42 October 21
புதுடெல்லி: இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் கார்போரல் வாங் யா லாங் நேற்றிரவு (அக். 20) சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், சீன ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால் தெரியப்படுத்தவும் என்று சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனையடுத்து இந்திய ராணுவ நெறிமுறைகள் படி, அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர் சீன ராணுவ வீரர், சுசூல் - மோல்டோ சந்திப்பு பகுதியில் நேற்றிரவு (அக். 20) அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க...திருச்சி என்ஐடி மாணவர்களை பாராட்டிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்