காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா, தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் எனக் கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா கோரிக்கை விடுத்தது. இருப்பினும், இந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனாவின் தலையீட்டை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது. ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க சீனா முயற்சி செய்து வருகிறது என்பதை அறிவோம்.