டெல்லி: 'மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடுஉணருகிறது' என்று அவரது பிறந்தநாளான இன்று (செப். 26) வாழ்த்து தெரிவிக்கையில் ராகுல் காந்தி ட்விட்டரில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இன்று தனது 88ஆவது வயதை எட்டியுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக ராகுல் தனது ட்விட்டரில், "மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணருகிறது. அவரின் நேர்மை, கண்ணியம், அர்ப்பணிப்பு உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது.
அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு அவருக்கு இனிமையானதாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்ததோடு, 'HappyBirthdayDrMMSingh' என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.