தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு தோல்வி - புதுச்சேரி முதலமைச்சர் தகவல் - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளதால், வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இது தோல்வியாகும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

chief-minister-narayanasamy
chief-minister-narayanasamy

By

Published : Feb 25, 2020, 10:40 PM IST

புதுச்சேரி அரசு சார்பில், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வார நிகழ்ச்சி இரண்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது. இரண்டாவது நாளான இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் மாணவ, மாணவிகளின் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர்களை சந்திக்கும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது," டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கின்றன.

குறிப்பாக, பாஜக கூட்டணியிலுள்ள பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், என்ஆர்சி சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியா வந்த ட்ரம்பிற்கு, பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தது வரவேற்புக்குரியது.

இந்தச் சந்திப்பில், இரு நாட்டுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் ரூ.21 ஆயிரம் கோடியில் கையெழுத்தாகியுள்ளது. ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தை பொறுத்தவரையில் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளதால், இது இந்தியாவிற்கு தோல்வி என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'புதுச்சேரியிலும் ஆம் ஆத்மி ஆட்சி!' - புதிய பொறுப்பாளர் நம்பிக்கை

ABOUT THE AUTHOR

...view details