நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நாளுக்குநாள் அதிகமாகப் பரவிவருகிறது. அதனால், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கரோனா இறப்பு விகிதம் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது.
வல்லரசு நாடுகளே இந்தக் கரோனாவால் விழிபிதுங்கியுள்ள நிலையில் இந்தியா சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, நாட்டில் கரோனா கண்டறிதல் சோதனை வேகமெடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.