தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் இதுவரை 77.11 லட்சம் பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் !

டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 77.11 லட்சத்தை கடந்ததுள்ளது.

India COVID-19 tracker: State-wise report
India COVID-19 tracker: State-wise report

By

Published : Nov 5, 2020, 5:05 PM IST

கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தநிலையில், தற்போது, படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சுமார் 50 ஆயிரத்துக்கு கீழ் இருந்த தினசரி தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, நேற்று (நவ. 4) சற்று அதிகரித்தது. இந்நிலையில் இன்று (நவ. 5) மீண்டும் பாதிப்புகள் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 209 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்து 64 ஆயிரத்து 086ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து இன்று (நவ. 5) காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், 704 பேர் புதிதாக இறந்துள்ளனர். மேலும், நாட்டில் கரோனா பாதிப்பு இறப்பு மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 24ஆயிரத்து 315ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா புள்ளி விபரம்

அதுமட்டுமன்றி நாட்டில் கரோனாவிலிருந்து மொத்தம் 77லட்சத்து 11ஆயிரம் 809 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று (நவ. 4) மட்டும் 55ஆயிரத்து 331 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது ஐந்து லட்சத்து 27ஆயிரத்து 962 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நாட்டில் இதுவரை மொத்தம் 11 கோடியே 42 லட்சத்து 8ஆயிரத்து 384 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று (நவ. 4) மட்டும் 12 லட்சத்து 9ஆயிரத்து 425 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி பிணை கோரிய மனு மீது இன்று விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details