இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினம்தோறும் 60 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன.
இந்தியாவில் உச்சம் தொட்ட கரோனா... ஒரே நாளில் 78 ஆயிரம் பேர் பாதிப்பு!
டெல்லி: ஒரே நாளில் 78 ஆயிரத்து 512 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 லட்சத்து 21 ஆயிரத்து 245ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 லட்சத்து 21 ஆயிரத்து 245ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 469ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 74 ஆயிரத்து 801ஆக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்து 24 ஆயிரமாக உள்ளது. ஆந்திராவில் திடீரென தொற்று பாதிப்பு அதிகமானதால், பல மாதங்களாக இரண்டாம் இடத்திலிருந்த தமிழ்நாடு, தற்போது கரோனா அதிகம் பாதித்த பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது.