நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கரோனா தொற்றால் நேற்று (ஆக. 28) ஒரே நாளில் மட்டும் 76 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 972ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 48 ஆயிரத்து 998ஆக அதிகரித்துள்ளது. இதனால் மீட்பு விகிதம் 76.47ஆக உள்ளது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஆயிரத்து 21 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 550ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனைகள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டு ஏழு லட்சத்து 52 ஆயிரத்து 424 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஏழாம் தேதி 20 லட்சத்தைக் கடந்தது. பின்னர் கடந்த 23ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.