உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் பின்வருமாறு:
கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 75 ஆயிரத்து 760 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 234ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஆக. 26) ஒரே நாளில் 1,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 472ஆக அதிகரித்துள்ளது. ஆனால் உயிரிழப்பு விகிதம் 1.86 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 23 ஆயிரத்து 771ஆக உயர்ந்துள்ளது. ஏழு லட்சத்து 25 ஆயிரத்து 991 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.24 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் பதிவாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் மூன்று கோடியே 85 லட்சத்து 76 ஆயிரத்து 510 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்று (ஆக. 26) ஒரே நாளில் ஒன்பது லட்சத்து 24 ஆயிரத்து 998 மாதிரிகள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.