தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா பாதிப்பு 562ஆக உயர்வு! - சுகாதாரத் துறை பக்கம்

டெல்லி: கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 562ஆக உயர்ந்துள்ளது.

India coronavirus cases rises to 562
India coronavirus cases rises to 562

By

Published : Mar 25, 2020, 10:27 AM IST

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவருகிறது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதேபோல், இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நேற்று மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 562 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மொத்தமாக ஒன்பது பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் 512 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும், 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு எதிரொலி - சபரிமலை கோயில் திருவிழா ரத்து!

ABOUT THE AUTHOR

...view details