இந்தியா, தனது அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி-2 ஏவுகணை சோதனையை நேற்று இரவு (அக்.16) வெற்றிகரமாக நடத்தியது. 350 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கவல்ல இந்த பிருத்வி-2 ஏவுகணை, ஒடிசா மாநிலம், பாலாசூரில் உள்ள வழக்கமான சோதனை தளத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை, ஒரு டன் அளவிலான குண்டுகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சோதனை 40 நாட்களில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட 11ஆவது ஏவுகணை சோதனை ஆகும். கடைசியாக நடத்தப்பட்ட நிர்பயா ஏவுகணையின் சோதனையைத் தவிர மற்ற அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.