இந்தியப் பெருங்கடலின் மேற்கு பிராந்தியத்தில், சீன ராணுவத்தினரின் ஆதரவுடன் உலாவும் சீன தொலைதூர நீர் மீன்பிடி கப்பல்களை இந்திய கடற்படை கண்டறிந்துள்ளது. சீன கப்பல்கள் அப்பகுதியில் உள்ளதை இந்திய போர் கப்பல்கள் உறுதிபடுத்தியுள்ளதாக இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்டுள்ள சீன நீர் மீன்பிடி கப்பல்கள் மொராக்கோ நாட்டை நோக்கி பயணிப்பதாகவும் கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைப்பதால் மேற்கு இந்தியப் பெருங்கடல் சர்வதேச அளவில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.