சிக்கிம் எல்லையில் நகுலா பகுதியில் ரோந்து பணியில் இருந்த சீன வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது, இரு நாட்டு படையினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா... இந்திய ராணுவம் தக்க பதிலடி! - sikkim border nagula attack
டெல்லி: இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களின் முயற்சியை, இந்திய வீரர்கள் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையிலான ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று (ஜனவரி 24) நடைபெற்றது. சுமார் 15 மணி நேரம் நீடித்த போராட்டத்தில் எல்லையில் படைகளைத் திரும்ப பெறுவது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு மே மாதம் சீனா எல்லையில் அத்துமீறியதைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லையிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், அங்குப் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.