சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் பகுதியின் இந்திய நாட்டிற்குரிய கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிலிருந்து சீன ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பில் விவாதிக்க இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
கிழக்கு லடாக்கின் சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியா - சீனா இடையேயான மோதலை அடுத்து இருநாடுகளும் பல சுற்று ராஜதந்திர மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சீன ராணுவம் தனது படைகளை விரைவாக வெளியேற்ற வேண்டும் என இந்திய தரப்பு வலியுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஜூன் 22 அன்று நடந்தது. ஜூன் 30ஆம் தேதி நடந்த மூன்றாவது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரும் படிப்படியாக வெளியேறுவதை முன்னுரிமையாக ஒப்புக் கொண்டனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் இடையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு ஒரு நாள் கழித்து ஜூலை 6ஆம் தேதி துருப்புக்களை வெளியேற்றுவதற்கான முறையான செயல்முறை நடைமுறைக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கத்தின் காரணமாக, கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சீன அரசு தனது துருப்புக்களை விரைவாகவும் உடனடியாக மீளப்பெற உறுதியளித்தது. அதன்படி கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில உராய்வு புள்ளிகளிலிருந்து பின்வாங்கியது. இருப்பினும், பாங்காங் திசோவில் உள்ள மலைப் பகுதிகளிலிருந்து அவை பின்வாங்கவில்லை என கூறப்படுகிறது.
ஃபிங்கர்ஸ் நான்கு மற்றும் எட்டுக்கு இடையிலான பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இப்பகுதியில் உள்ள மலை பகுதிகள் ஃபிங்கர்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன.