தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - சீனா இடையே ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தேதி அறிவிப்பு - இந்தியா - சீன மோதல்

இந்திய சீன நாடுகளுக்கு இடையே ராணுவ ரீதியான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - சீன மோதல்
இந்தியா - சீன மோதல்

By

Published : Oct 4, 2020, 4:27 PM IST

Updated : Oct 5, 2020, 10:32 AM IST

மே மாதம் முதல் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக நான்கு மாதங்களாக இந்தியா, சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.

செப்டம்பர் 4ஆம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கியும் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண ஐந்து அம்சத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர்மட்ட அலுவலர்களுக்கு இடையேயான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை 13 மணி நேரம் நீடித்தது.

இந்திய சீனா எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருந்த நிலையில், பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 5, 2020, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details