இந்திய, சீன, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை (ஆர்.ஐ.சி.) இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில், மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, இந்திய, சீன நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்னையைத் தீரக்க மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது என தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "பிரச்னைகளைத் தீர்க்க இரு நாடுகளும் அமைதியான வழியைத் தேர்ந்தெடுக்கும் என்பதில் ரஷ்யாவுக்கு நம்பிக்கை உள்ளது. இதில், மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது. குறிப்பாக, இம்மாதிரியான பிரச்னைகளில் அவர்களுக்கு உதவி தேவைப்படாது என நினைக்கிறேன. அவர்களாகவே தீர்த்துக் கொள்வார்கள். ராணுவ ரீதியாக உயர்மட்ட அலுவலர்களும் அரசியல் ரீதியாக வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இப்பிரச்னையைத் தீர்ப்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.