தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லைப் பகுதியில் பின் வாங்க மறுக்கும் சீனா! - கல்வான்ல பள்ளத்தாக்கு

கிழக்கு லடாக் பிங்கர் 5ஆம் பகுதிக்கு மேல், சீனா தனது ராணுவத்தை திரும்பப்பெற மறுத்து வருவதால், இரு நாடுகளுக்கிடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

சீனா
சீனா

By

Published : Jul 17, 2020, 6:02 AM IST

இந்திய, சீன எல்லையான கிழக்கு லடாக்கிலிருந்து கிட்டத்தட்ட 13,800 அடியில் அமைந்துள்ள பாங்கோங் சோ ஏரியின் வடக்குப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே மே 5ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இது நடைபெற்று 60 நாள்கள் ஆகியுள்ள நிலையில், பதற்றத்தை குறைக்கும் நோக்கில் ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே, 134 கி.மீ., நீளமுள்ள ஏரியின் வடக்குக் கரையில் உள்ள பிங்கர் 5ஆம் பகுதிக்கு மேல் சீனா தனது ராணுவத்தை திரும்பப் பெற மறுத்து வருகிறது.

சீன ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள், தற்போது பிங்கர் 5ஆம் பகுதியில் உள்ளதாகவும் அங்கிருந்து பின் வாங்க அவர்கள் மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்தைத் திரும்பப்பெறும் நடவடிக்கையின் முதல் கட்டத்தில் பிங்கர் 4ஆம் பகுதியிலிருந்து பிங்கர் 5ஆம் பகுதிக்கு சீனா தனது படைகளை விலக்கிக் கொண்டது. தற்போது, பிங்கர் 5ஆம் பகுதியில் படைகள் திரும்பப் பெறும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உயர் மட்ட ராணுவ அலுவலர் கூறுகையில், "நடைபெறுவதை பொறுத்திருந்து பார்ப்போம். இம்மாதிரியான செயல் இரு நாட்டு பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

திரும்பப்பெறும் நடவடிக்கை குறித்து மற்றொரு உயர் மட்ட ராணுவ வீரர் கூறுகையில், "கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பர நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கு சற்று காலம் தேவை. எனவே, ராணுவம் திரும்பப்பெறும் நடவடிக்கையை வேகமாக நடத்திக்காட்டுவது கடினமான ஒன்று. இதற்கு, எண்ணிலடங்கா பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சமூக செயற்பாட்டாளர் வரவர ராவுக்குக் கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details