கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில், இந்திய-சீன எல்லை விவகாரத்திற்கான ஆலோசனை, ஒருங்கிணைக்கும் குழுவின் கூட்டம் நேற்று (ஆக. 20) நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா சார்பாக வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசியா இணைச் செயலாளரும், சீனாவின் சார்பில் எல்லை மற்றும் பெருங்கடல் துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோரின் தலைமையில் அலுவலர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, இருநாட்டு உறவுகளின் அனைத்து வளர்ச்சிக்கும் எல்லைப் பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பது அவசியம் என்பதால் இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் உடன்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.