தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வாங்கும் இந்தியா! - சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

டெல்லி : உலகிலேயே இந்தியாதான் அதிகப்படியான எண்ணிக்கையில் அதாவது 1.6 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

By

Published : Dec 5, 2020, 4:05 PM IST

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டுவரும் 100 தடுப்பூசிகளின் பாதுகாப்பு சோதனைகளும் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலகிலேயே இந்தியாதான் அதிகப்படியான எண்ணிக்கையில் அதாவது 1.6 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் 60 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்த மருந்தில் 500 மில்லியன் டோஸ்களை இந்தியா வாங்கியுள்ளது.

அமெரிக்க நிறுவனம் தயாரித்த நோவாவக்ஸ் மருந்தில் ஒரு பில்லியன் டோஸ்களையும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மருந்தில் 100 மில்லியன் டோஸ்களையும் இந்தியா வாங்கவுள்ளதாக டியூக் பல்கலைக்கழக உலகளாவிய சுகாதாரக் கண்டுபிடிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மூன்று வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளில் 1.6 பில்லியன் டோஸ்களை இந்தியா வாங்கவுள்ளதாகவும், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் நான்கு வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை வாங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் 1.58 பில்லியன் டோஸ்களையும் கரோனாவால் பெரிதும் பாதிப்படைந்த அமெரிக்கா ஒரு பில்லியன் டோஸ்களையும் வாங்கவுள்ளன.

இதுகுறித்து டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், "உற்பத்தித் திறன் கொண்ட இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்துடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details