தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மற்ற நாடுகளுடன் அறிவியல், தொழில்நுட்ப வசதிகளை பகிரும் இந்தியா - ஹர்ஷ் வர்தன் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன்

டெல்லி: பொதுவான சவால்களை எதிர்கொள்ள அறிவாற்றல், தொழில்நுட்பம், பயிற்சி திறன் ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நம்பிக்கை உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ஹர்ஸ் வர்தன்
ஹர்ஸ் வர்தன்

By

Published : Dec 24, 2020, 4:23 PM IST

வெளிநாட்டு அறிவியல், தொழில்நுட்பதுறை அமைச்சர்கள் மற்றும் தூதர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பொதுவான சவால்களை எதிர்கொள்ள அறிவாற்றல், தொழில்நுட்பம், பயிற்சிதிறன் ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையில் அண்டை நாடுகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்துவருகிறது. பொதுவான சவால்களை எதிர்கொள்தில் மற்ற நாடுகளுடன் அறிவாற்றலை பகிர்வதில் நமக்கு நம்பிக்கை உள்ளது. தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதில் மாநிலங்களின் சிறப்பான பலத்தை பயன்படுத்த அறிவியல் நம்மை ஒருங்கிணைக்கிறது.

மக்கள் சந்திக்கும் பல்வேறு விதமான பிரச்னைகளை தீர்க்க அறிவியல் உதவும். மக்களின் வளர்ச்சிக்காக ஆய்வகங்கள் மூலம் அறிவியலை கடைகோடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என இன்று நடைபெற்ற மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர்களின் மாநாட்டில், சக அமைச்சர்களை கேட்டுக் கொண்டேன்.

கடந்த சில ஆண்டுகளில், உலகளவில் அறிவியல் சார்ந்த துறையில் இந்தியா முன்னோக்கி சென்றுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details