தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE) உபயோகிப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வரும் ஆபத்தைப் பாதியாகக் குறைக்கலாம்.
இந்தத் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களில் கையுறைகள், கண் பாதுகாப்புக் கண்ணாடி, கால் பாதுகாப்பு உறை, சுவாசக் கருவிகள், செவிப்புலன் பாதுகாப்புக் கருவி போன்ற பல பொருள்கள் அடங்கும்.
இதைப் பயன்படுத்துவதன் மூலன் கரோனா போன்ற பெருந்தொற்றிலிருந்து தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE) உற்பத்தி செய்வதில் உலகளவில் இந்தியா இரண்டாவது நாடாக உள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் இடத்தில சீனா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூடங்குளம் 2ஆவது அணு உலை பழுது - 465 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு