தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நரேந்திர மோடி-ஷேக் ஹசீனா சந்திப்பு! - 3 முக்கியத் திட்டங்கள் தொடங்கிவைப்பு - நரேந்திர மோடி, ஷேக் ஹசீனா இணைந்து 3 திட்டம் தொடக்கம்

டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார். பின்னர், இருவரும் இணைந்து மூன்று முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைக்கின்றனர்.

Narendra Modi

By

Published : Oct 5, 2019, 10:22 AM IST

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, அவர் இந்திய-வங்கதேச தொழில்முறை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது இருநாடுகளுக்கு இடையே தொழில், கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா இன்றுகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், மோடியும் ஹசீனாவும் இணைந்து மூன்று முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறும்போது, 'இருநாடுகளுக்கும் இடையே நெருக்கமான நல்லுறவு உள்ளது. அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள்' என்றார்.

மேலும் இந்தியா-வங்கதேசம் இடையே கலாசாரம், ஒப்பந்தம், வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க

தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிடும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details