இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானின் நாரோவால் மாவட்டத்தில் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. சீக்கியர்களின் மிக முக்கியப் புனித ஸ்தலமான இந்த குருத்வாராவில் புதிதாகக் கட்டப்பட்ட குவி மாடங்கள் சமீபத்தில் இடிந்து விழுந்தன.
இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறியுமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கர்தார்பூர் குருத்வாராவில் புதிதாகக் கட்டப்பட்ட குவி மாடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் சீக்கியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கான காரணத்தைக் கண்டறிந்து சேதத்தைச் சரிசெய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது' என்றார்.
இதையும் படிங்க : 'இப்போதைக்குத் தடுப்பூசி தயாராகாது' - உலக சுகாதார அமைப்பு