தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவும் அந்நிய நேரடி முதலீடும்: மாறுபட்ட பார்வை தேவை! - அந்நிய நேரடி முதலீட்டில் மாறுபட்ட பார்வை தேவை

நாட்டின் பொருளாதாரத்தில் வெளிநாட்டினரின் செல்வாக்கை நாம் அதிகம் விரும்பாமல் இருந்தாலும், மொத்தமாக அந்நிய நேரடி முதலீட்டை நிராகரிக்க இந்தியாவால் முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

FDI
FDI

By

Published : Dec 9, 2019, 1:36 PM IST

எஃப்.டி.ஐ. எனப்படும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு நாளும் வலுவான முக்கியத்துவத்தை அரசு உணர்த்திவருகிறது. கடந்த ஓராண்டில் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் தொடங்கியதையடுத்து, வளர்ந்துவரும் பல சந்தைகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்காசியாவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காகப் புதுப்பிக்கப்பட்ட ஒரு உந்துதல் தூண்டப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சீனாவிலிருந்து தங்களது அலகுகளை மாற்ற விரும்பும் புதிய நிறுவனங்களுக்கான வரி விகிதங்களை தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் 10 விழுக்காடு குறைத்தன. அந்த நாடுகளின் இத்தகைய குறைப்பு, சில வாரங்களுக்கு முன்பு இந்திய அரசு வரிகளை குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தந்திருக்கும்.

நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, அந்நிய நேரடி முதலீட்டின் வளர்ச்சி பெரும்பாலும் வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களை விட மந்தமாகவே உள்ளது. மாறாக, போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு (FPI) இந்தியா மிகவும் பிடித்த ஒன்றாகும்; அவை பெரும்பாலும் பங்குச் சந்தைகளுக்கு செல்லும் "ஹாட் மணி" என்று கருதப்படுகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் செய்யும் முதலீட்டுக்கு போர்ட்ஃபோலியோ முதலீடு எனப் பெயர். இந்தியாவை பொறுத்தவரை ஒட்டுமொத்த மந்த பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில், இந்த பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் நிர்பந்தத்தை மத்திய அரசு உணர்த்தியுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு

முதலீடு செய்வதற்கு இந்தியா பொருத்தமான நாடு என்பது உலக வங்கி உட்பட பெரிய அந்நிய நிறுவனங்களின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் பெரும் நிதி ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. பொதுவாக, அந்நிய நேரடி முதலீடு எப்போதுமே நாட்டிற்கு விரும்பத்தக்கது. ஏனெனில் அது நீண்டகால பார்வையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் சொத்துக்களை உருவாக்க முயல்கிறது. நீண்டகால வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது. மிக முக்கியமாக, இந்த அந்நிய போர்ட்ஃபோலியோ வரத்துகளில் பெரும்பகுதி, நிதி இறுதியாதாரங்கள் மீது சந்தேகப்பார்வை விழுந்துள்ள மொரீஷியஸ் போன்ற நாடுகளின் வழியாக வருவதாகக் கூறப்படுகிறது. போர்ட்ஃபோலியோ பணத்தின் இத்தகைய முக்கியத்துவம், ஒரு சாத்தியமான அழுத்த புள்ளியை உருவாக்குகிறது. குறிப்பாக மந்தநிலையின் போது, அது இயற்கையாக இருந்தாலும் கூட, அவற்றின் பல்வேறு அளவுகோல் குறியீடுகளின் இயக்கத்தை மோசமாக்கி, பெரிதாக்க முனைகின்றன.

கடந்த நான்கு மாதங்களில் உலக வர்த்தகம் தொடர் சரிவை சந்தித்துள்ளது. இந்த பத்தாண்டுகளில் மிக நீண்ட தொடர்ச்சியான சரிவை காட்டியுள்ளதால், நீண்டகால முதலீட்டாளர்களின் தேவையை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். உலக வர்த்தகம் குறைந்து வருவதன் பொருள், வெவ்வேறு நாடுகளில் இருந்து நீண்டகால முதலீடுகளை ஈர்ப்பதில் நிர்பந்தம் இருக்கும் என்பதாகும். எனவே, நீண்டகால முதலீட்டாளர்களின் கவலைகளுக்கு, இந்தியா மருந்தாக மாறும். இது இந்தியாவின் பொருளாதார தேவைகளுக்கு அதிக லாபம் தரும்.

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டாய தேவை

நாட்டின் பொருளாதாரத்தில் வெளிநாட்டினரின் செல்வாக்கை நாம் அதிகம் விரும்பாமல் இருந்தாலும், மொத்தமாக அந்நிய நேரடி முதலீட்டை நிராகரிக்க இந்தியாவால் முடியாது என்பதை நாம் உணர வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் தேவைகளில் பெரும்பாலானவற்றை, இந்தியா இறக்குமதி செய்வதன் பொருள், இந்தியா மதிப்புமிக்க அந்நிய செலாவணியின் நிரந்தர பற்றாக்குறையை, குறிப்பாக ஏற்றுமதி வேகமாக வளரவில்லை என்பதால் எதிர்கொள்கிறது. ஏற்றுமதி பற்றாக்குறையின் விளைவாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மேலும் சுதந்திரம் பெற்ற பின்னர் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 2-3 விழுக்காடாக உள்ளது. இதன் விளைவாக, இந்தியா அதிக டாலர்களை (அல்லது பிற முக்கிய பணம்) சம்பாதிக்கவோ, ஈர்க்கவோ அல்லது பெறவோ வேண்டும்.

அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இது இந்திய பொருளாதாரத்திற்கு மதிப்பு சேர்க்கும். அதிக மதிப்புள்ள மற்றும் முக்கிய பொருட்களை வழங்குவதால் பொருளாதார மதிப்பு என்ற சங்கிலிலியில் ஏற இந்திய நிறுவனங்கள் உதவுகிறது. நாட்டுக்கு அந்நிய நேரடி முதலீடு தேவைப்படுகிறது. ஏனெனில் மூலதன பற்றாக்குறை கொண்டது நம்நாடு. இது பெரும்பாலும் மூன்று மோசமான பற்றாக்குறைகளுடன் இயக்குகிறது. அவை: நிதி, வருவாய் மற்றும் மூலதன பற்றாக்குறை. எந்தவொரு நாட்டிலும், இம்மூன்று பற்றாக்குறைகள் கையை விட்டுச்செல்ல அனுமதித்தாலோ அந்நிய நேரடி முதலீடு வந்தாலோ எந்தவொரு பொருளாதாரமும் நெருக்கடிக்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

மேலும், இந்திய பொருளாதாரத்தின் தன்மை என்னவெனில், நாம் பெரும்பாலும் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் நுகர்வு நாடு. மூலப்பொருட்கள், பகுதி முடிக்கப்பட்ட பொருட்கள் அல்லது குறைந்த சேவைகளை ஏற்றுமதி செய்யும் நாடு என்பதாகும். இத்தகைய ஏற்றுமதிகளில் உள்ள சிக்கல் என்னவெனில், அவை குறைவான அளவுள்ளவை; மிகவும் பாதிக்கப்படுகின்றன அல்லது உலகளாவிய போக்குகளின் மாறுபாடுகளுக்கு ஆளாகின்றன. இதற்கு மாறாக, உயர் தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்யும் தென் கொரியா போன்ற நாடுகள், ஒப்பீட்டளவில் குறுகிய கால நிகழ்வுகளில் இருந்து அதிகம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

அந்நிய நேரடி முதலீடுகள் தேவைக்கான மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால், மெதுவாக வளரும் ஏழை (அல்லது ஒப்பீட்டளவில் ஏழை) நாடுகள் மற்றும் மேம்பாடு அடைய, மாற்றப்பட்ட தொழில்நுட்பத்தை நியாயமான முறையில் ஏற்பதாலும், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதாலும் தங்கள் பொருளாதார வெளியீடுகளை மேம்படுத்த முடியும். ஒருநாடு சுதேசி தொழில்நுட்பத்தை உருவாக்க நீண்ட காலமாகும். மேலும் உள்நாட்டு நிலைமைக்கேற்ப அதை ஏற்கச் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும். இதற்கு நேர்மாறாக, தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வது எந்தவொரு பொருளாதாரத்திற்கும் ஒரு தொடக்கத்தைத் தரும். குறிப்பாக இளைஞர்கள் அதிகம் நுழையும் பெரிய தொழிலாளர் சந்தை கொண்ட இந்தியாவுக்கு உகந்தது. ஜப்பான் விவகாரம் (இரண்டாம் உலகப்போருக்கு பின் சீனா, தென் கொரியா மற்றும் 1990களில் முழு தென்கிழக்கு ஆசியா) ஒரு சாத்தியமான நன்மைக்கான தெளிவான அறிகுறியாகும். அந்த நாட்டால் தொழில்நுட்பத்தை கவனமாக மற்றும் திட்டமிட்டு ஏற்று, வெளிநாட்டு மூலதனத்துடன் பொருளாதாரத்தை கொண்டு வர முடிந்தது.

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் உள்ள சிக்கல்கள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் தொழில் துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் விரிவான பகுப்பாய்வு, அன்னிய நேரடி முதலீடு தொடர்பான பல சிக்கல்களில் கொள்கை வகுப்பாளர்களின் கவனம் தேவை என்பதைக் குறிக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டின் புள்ளிவிவரங்கள் கவலைக்குரியவை, ஏனெனில் அவை மந்தநிலை தொடங்குவதற்கு நீண்ட காலம் முன்பே சரியத் தொடங்கின. இது ஒரு விளைவு அல்லது மந்தநிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 2016-17 முதல், அந்நிய நேரடி முதலீடுகள் பெரும்பாலும் தேக்கமடைந்து, 60-64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றளவிலேயே உள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டில் இந்த தேக்கநிலைக்கு ஒரு சாத்தியமான காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருவாயை (இது, அமெரிக்க டாலரில் 10 - 13.5 பில்லியன் அல்லது ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் கோடி வரை மாறுபடும்) பெரிய அளவில் மறுமுதலீடு செய்கிறார்கள். இதற்கு மாறாக, 2015-18 முதல் சீனாவை பொறுத்தவரை இது, ஆண்டுதோறும் சுமார் 196-128 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மாறுபடுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் இன்னும் சிக்கலானது. அந்நிய நேரடி முதலீட்டில் பெரும்பாலானவை ஆறு நாடுகளிலிருந்து உருவானவை: அவை, மொரீஷியஸ் (சுமார் 30-35 விழுக்காடு), சிங்கப்பூர் (15-20 விழுக்காடு), ஜப்பான் (5-10 விழுக்காடு), நெதர்லாந்து (5-10 விழுக்காடு), இங்கிலாந்து (5-7 விழுக்காடு) மற்றும் அமெரிக்கா (5-7 விழுக்காடு).

அந்நிய நேரடி முதலீடு அல்லது எஃப்ஐஐ போன்ற வெளிநாட்டு வருகைகள், தேனில் நனைத்த வாள் போன்றவை: அவை இரு வழிகளிலும் செயல்படலாம். ஒன்று நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும். உயர் தொழில்நுட்பம், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு அல்லது உலகளவிய பயனுள்ள அறிவுசார் சொத்துக்களை உருவாக்கக்கூடிய பகுதிகளில் அந்நிய நேரடி முதலீடு சென்றால் நன்மை பயக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தொழில்நுட்பம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியால் உலகம் விரைவான மாற்றத்தைக் காணும்போது, ​​உலகப் பொருளாதாரத்தில் இந்தியா போட்டித்தன்மையுடன் இருக்க உதவும். அதே வேளையில், உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்கக்கூடிய உயர் மதிப்புள்ள வேலைகளை உருவாக்கும் திறனும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, புள்ளிவிவரங்களின் பகுப்பாய்வு, அந்நிய நேரடி முதலீட்டின் பெரும்பகுதி நீண்ட கால பொருளாதாரத்திற்கு நேரடி மதிப்பைச் சேர்க்காத பகுதிகளுக்குச் சென்றுள்ளதை குறிக்கிறது.

போதிய விவரங்கள் இல்லாத போதும், 2000ஆம் ஆண்டிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டின் பெரும் பகுதி கீழ்கண்டவாறு சென்றிருப்பதை ஒரு பகுப்பாய்வு காட்டுகிறது. அவை, சேவைத் துறை (18 விழுக்காடு), கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் (7 விழுக்காடு), கட்டுமானம் (7 விழுக்காடு), தொலைத்தொடர்பு (7 விழுக்காடு), ஆட்டோமொபைல் தொழில் (5 விழுக்காடு), பார்மா (4.43 விழுக்காடு), வர்த்தகம் (4.23 விழுக்காடு) இரசாயனங்கள் (4 விழுக்காடு), மின்சாரம் (3.49 விழுக்காடு), உலோகவியல் தொழில்கள் (3.11 விழுக்காடு) மற்றும் ஹோட்டல் மற்றும் சுற்றுலா (3.06 விழுக்காடு). இதிலும் கூட சிக்கலாக, அவுட்சோர்சிங், நிதி சேவைகள், கூரியர் மற்றும் எப்போதாவது அரிதாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு நுழைந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்தின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்காத பகுதிகளுக்கு, இந்தியா அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கக்கூடும் என்பதை இது குறிக்கிறது. மாறாக, பெரிய இந்திய சந்தையை சுரண்டுவதற்கு இது உதவுகிறது.

முன் உள்ள வழி

எனவே, அந்நிய நேரடி முதலீட்டை நோக்கிய தனது கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. எந்தவொரு புதிய முதலீடுகளையும் திருப்புவதற்கு இந்திய மற்றும் உலக பொருளாதாரங்களின் நிலைதன்மை, இந்தியாவுக்கு சொகுசை வழங்காது என்றாலும், அது ஊக்குவிக்கும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. மின்னணு வர்த்தகம், கூரியர் நிறுவனங்கள், வணிகம், கட்டுமானம், ஹோட்டல் துறை அல்லது வேறு எந்த நுகர்வோர் சார்ந்த தொழில்களுக்கும் வரிச்சலுகைகளை வழங்குவதில் அதிக பொருளாதார பலனில்லை.

இத்தகைய துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில்நுட்பம் அல்லது ஏற்றுமதி வருவாயை பொறுத்தவரை நாட்டிற்கு வழங்குவது குறைவு. இருப்பினும் இத்தகைய முதலீடுகள் உற்பத்தித்திறனின் ஒட்டுமொத்த அதிகரிப்பை சேர்க்கக்கூடும். இத்தகைய உள்நுகர்வு உந்துதல் துறைகளுக்கு வரி சலுகைகளை வழங்குவதற்கான நீண்டகால செலவு மதிப்பு கூட்டல் வடிவத்தில் சில நன்மைகளைத் தருகிறது. இது மாறிவரும் உலகளாவிய நிலைமைகளில் இந்திய தயாரிப்புகளின் போட்டி நிலையை அதிகரிக்க உதவும்.

ஆர்.சி.இ.பி. எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம் பற்றி ஆவேசமாக எழும் விவாதங்களின் பின்னணியில் இந்தியா அந்நிய நேரடி முதலீட்டிற்கு வழங்கும் நன்மைகளின் தன்மை மிக முக்கியமானது. தொழிலாளர் முதலீடு இல்லாத (அல்லது உழைப்பின் குறைந்த செலவை பயன்படுத்தும் முயற்சி) இங்குள்ள குறைந்த நிலை வணிகங்களை விட முக்கிய சந்தைகளில் இருக்கும் துறைக்கு மட்டும் வரி சலுகை அல்லது நில விலையில் சலுகை போன்ற பிற உதவிகளை அரசு வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளது.

அந்நிய நேரடி முதலீடு

தென் கொரிய பொருளாதாரத்தின் மறுநோக்குநிலை மற்றும் 1997 நெருக்கடிக்கு பிறகு அவர்கள் தந்த சலுகைகளை அரசு கருத்தில் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் நீண்டகால மதிப்பு கூட்டலைச் சேர்க்காவிட்டாலும், அதிக வேலைஇழப்பு அல்லது வாழ்வாதார (விவசாயம் போன்றவை) இழப்பு தரும் துறைகளுக்கு பலன்களை வழங்குவதை அரசு தவிர்ப்பது முக்கியம். வெறுமனே, இதுபோன்ற உயர் தொழில்நுட்பப்பகுதிகளில் 100 விழுக்காடு தன்னிச்சை பாதையின் கீழ் முதலீடுகள் செய்வதை அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், பரிமாற்ற விலை விதிமுறைகளை எளிதாக்க வேண்டும்.

இதையும் படிங்க: டெல்லி தீ விபத்து - 43 பேர் உயிரிழக்கக் காரணமான கட்டட உரிமையாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details