உலக பொருளாதார மன்றத்தின் மெய்நிகர் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.
இதுவரை பார்த்திராத சூழ்நிலையை இந்தியாவும் சீனாவும் சந்தித்து வருகிறது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
டெல்லி: இந்தியாவும் சீனாவும் இதுவரை பார்த்திராத இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருகின்றன என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அப்போது, ”இந்திய - சீன எல்லையில் ஒருவருக்கொருவர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கண்காணிப்பதே பெரிய பிரச்னையாக உள்ளது ஒரு வகையில், முன்னோடியில்லாத ஒரு சூழ்நிலையை இரு நாடுகளும் கடந்து வருகிறோம். ஆனால் அதை ஓரளவு நீண்ட காலத்திலிருந்து பார்த்தால், இது ஒரு பெரிய நிகழ்வின் ஒரு அம்சம் என்று நான் கூறுவேன்.
இரு தரப்பினரும் உட்கார்ந்து பேசினால் தீர்வை கண்டறிந்துவிடலாம். இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் உயர்வுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். இவற்றில் சில பொதுவான நலன்களும், பல தனிப்பட்ட நலன்களும் அடங்கியிருக்கும். அவற்றை ஒருவருக்கொருவர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். எல்லைப் பிரச்னை அந்த பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கும்” என்றார்.