இந்திய ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக்கில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன ராணுவம், இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவியது. இதையடுத்து இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் இருநாட்டு வீரர்களும் காயமுற்றனர். இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 6) இரு நாட்டு ராணுவ உயர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள். இந்த ராணுவ பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது.
கிழக்கு லடாக்கில் பின்வாங்கும் இந்திய-சீன படைகள்! - eastern Ladakh
17:17 June 09
டெல்லி: இந்தியா, சீனா இடையே நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட ராணுவ பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இரு நாட்டு ராணுவ துருப்புகளும் கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் பரஸ்பரமாக பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இரு நாட்டுப் படைகளும் பரஸ்பர அடிப்படையில் படைகளை விலக்கிக் கொண்டுள்ளன. நாளை (புதன்கிழமை) கிழக்கு லடாக் பகுதியில் ராணுவ பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ’குறிப்பிடத்தக்க’ சீன துருப்புக்கள் பின்வாங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. பாங்கோங்த்சோவில் உள்ள பகுதியைத் தவிர, மற்ற இடங்களில் சீனத் துருப்புக்கள் இரண்டு முதல் மூன்று கிமீ தூரம் பின்வாங்க தொடங்கியுள்ளன.
இதற்கு ஈடாக, இந்திய தரப்பு தனது சில துருப்புக்களையும் வாகனங்களையும் அந்தப் பகுதிகளிலிருந்து திரும்ப அழைத்துள்ளது என்றும் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கிழக்கு லடாக் விவகாரம்: இரு நாடுகளும் எல்லை வகுப்பது அவசியம்!