கரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மார்ச் கடைசிவாரம் முதல் மே மாதம் வரை அமல்படுத்தியிருந்தது.
இதனால் பல தரப்பட்ட மக்களும் கடும் இன்னலுக்கு உள்ளானர்கள். வேலையின்றி வருமானமின்றி பொது மக்கள் ஊரடங்கு காலத்தில் மிகவும் தவித்தனர்.
மே 31ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரளவு மீள வழி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மே மாதத்தில் இந்தியாவில் வேலையின்மையின் விகிதம் 23.5விழுக்காடாக இருந்தது என இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தொழிலாளர் சந்தையின் நிலை மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், வேலை வாய்ப்பின்மை ஏப்ரல் மாதத்தில் இருந்த அதே அளவு நீடித்தாலும், ஏப்ரல் மாதத்தில் இருந்த தொழிலாளர் பங்கேற்பு விழுக்காடான 35.6, மேமாதத்தில் 38.2 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் ஊரடங்கிற்கு முன்பிருந்த தொழிலாளர் பங்கேற்பை விட தற்போதைய தொழிலாளர் பங்கேற்பு விகிதம் பலவீனமாக உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: வீக்எண்ட் ஷட்டவுன் அறிவித்த ஒடிசா!