நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் புதுச்சேரி இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலைமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் களைகட்டிய சுதந்திர தின விழா..! - முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: இந்திராகாந்தி மைதானத்தில் இன்று நடந்த 73ஆவது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி
பின்பு, சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.