தமிழ்நாடு

tamil nadu

'நோ தடுப்பூசி, நோ சம்பளம்' ஊழியர்களை எச்சரித்த ஆட்சியர்!

By

Published : Feb 5, 2021, 8:07 PM IST

புவனேஷ்வர்: கரோனா தடுப்பூசி போட பதிவு செய்து விட்டு, ஊசி போட மறுக்கும் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது என ஒடிசா ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி
தடுப்பூசி

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக, முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பதிவு செய்துவிட்டு கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என்றால் சம்பளம் வழங்கப்படாது என ஒடிசா ஆட்சியர்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கையில், "கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ள சுகாதார துறையினரும், அங்கன்வாடி ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'தடுப்பூசி ஓதுக்கிடு தொகை தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்' - ஹர்ஷ் வர்தன்

ABOUT THE AUTHOR

...view details