இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 1971ஆம் ஆண்டு போர் நடந்தது. இதன் விளைவாக வங்கதேசம் நாடு உருவானது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதிலிருந்து ஐநா மெல்ல மெல்ல விலகிக் கொண்டது. சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் உறவு எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.
இதன் முதல் தாக்கம் அணு ஆயுத சோதனையை 1974 ஆம் ஆண்டு இந்தியா நடத்தியபோது நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையைச் சாராத நாடு நடத்திய முதல் அணு ஆயுத சோதனை அதுவாகும்.
1989ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்தது. போராட்டகாரர்களுக்கு ஆயுதம் வழங்கி பயற்சி தருவது பாகிஸ்தான் என இந்தியா குற்றஞ்சாட்டியது. ஆனால், தார்மீக ஆதரவை மட்டும்தான் அவர்களுக்கு தருவதாக பாகிஸ்தான் கூறியது.
வான்வழி தாக்குதலில் ஈடுபடுவது தவிர்க்கப்படும் என இருநாடுகள் 1991ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. மேலும், போரின்போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என மற்றோர் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே டெல்லியில் கையெழுத்தானது.
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததால் பதற்றம் அதிகரித்தது. 1998ஆம் ஆண்டு இரு நாடுகளும் அணு ஆயுத சோதனை நடத்தியது. இதனால், இரு நாடுகளின் மீதும் உலக நாடுகள் அரசியல், பொருளாதார தடை விதித்தது.
பதற்றத்தை குறைக்க இந்திய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பேருந்து மூலம் சென்று லாகூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இருந்தபோதிலும், பாகிஸ்தான் படைகள் இமயமலையில் ஆக்கிரமிப்பு நடத்தியது. இழந்த பகுதிகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக கார்கிலில் இந்தியா போர் நடத்தியது. அமெரிக்கா தலையிட்டு இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட முயற்சித்தது.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர். பின்னர், 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதில் 14 பேர் பலியாகினர்.
பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆகியோருக்கு இடையே இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் வழியே வர்த்தகம் மேற்கொள்ள 2008ஆம் ஆண்டு வழி திறக்கப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா மும்பையில் தொடர் குண்டிவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்த்தியது. இதில் சிக்கி 166 பேர் உயிரிழந்தனர்.
பின்னர், நரேந்திர மோடி பாகிஸ்தானிடம் நல்லுறவைப் பேண தான் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரீப் பிறந்த நாளை முன்னிட்டு மோடி பாகிஸ்தானுக்குச் சென்றார்.
பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதல், ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை காஷ்மீரில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ் இ முகமது, உரியில் தாக்குதல் நடத்தியது. இது மேலும் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்தது.
உரி தாக்குதலை தொடர்ந்து இந்திய படைகள் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பு புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமின் மீது இந்தியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியது.
குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு சீராய்வு செய்யும்படி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது, இந்தியாவுக்கு ஆதரவான தீர்ப்பாகவும், தார்மீக வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதால், திரும்பபெறப்பட்டது. இதனால், மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கொண்டு வர சீனாவின் ஆதரவோடு பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு சபையை நாடியது. இரு நாடுகளுக்கு இடையே ரகசிய கூட்டம் நடந்தது. சர்வதேச ஆதரவு இந்தியாவுக்கு இருந்ததால் பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியை தழுவியது.