பயங்கரவாதிகளின் புல்வாமா தாக்குதலுக்கு எதிராக இந்திய விமானப்படை பாலகோட் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்திற்குப் பின் பாகிஸ்தான் வழியில் செல்ல வெளிநாட்டு விமானங்களுக்குப் பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது. இந்தத் தடையின் விளைவால் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களின் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்தது.
இந்தியாவுக்கு கேட்டை திறந்தது பாகிஸ்தான்! - பாகிஸ்தான்
பாகிஸ்தான்: இந்திய விமானங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கி பாகிஸ்தான் அரசு தனது வான்வழியை திறந்ததுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ஒரு நாளைக்கு மட்டும் 7 கோடி ரூபாய் கூடுதலாக செலவழித்துள்ளது. இதனால் விமான பயணிகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி ஜூலை 14ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிர்கிஸ்தானுக்கு பாகிஸ்தான் வழியில் செல்ல முடியாமல் வேறு வழியில் சென்றார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அரசு நேற்று நள்ளிரவில் இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியாகப் பறக்க அனுமதித்துள்ளது. இந்த முடிவின் மூலம் இரு நாடுகளுக்கிடையே நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.