தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பயிற்சி மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்’- பிரியங்கா காந்தி! - ‘பயிற்சி மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்’- பிரியங்கா காந்தி

டெல்லி: உத்திர பிரதேசத்தில் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

By

Published : Apr 28, 2020, 1:04 PM IST

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் பயிற்சி மருத்துவர்களின் சம்பளம் குறித்து பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,

“கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க பல்வேறு போராடங்களில் மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ஆபத்தான சூழலில் தங்களால் இயன்ற முயற்சிகளை பயிற்சி மருத்துவர்களும் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. இதனை புரிந்துகொண்டு உத்திர பிரதேசத்தில் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்களுக்கும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பளத்தை உயர்த்திதர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'தரமற்ற உபகரணங்கள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - பிரியங்கா காந்தி

ABOUT THE AUTHOR

...view details