உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்ய சென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்துவரும் சிறப்பு காவல் படைக்கு ஒரு வீடியோ பதிவு கிடைத்துள்ளது. அதில், பாஜகவின் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தான் தொடர்பில் இருந்ததாக துபே தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, அபிஜித் சங்கா, பகவதி சாகர் ஆகிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தன்னை அதிலிருந்து காப்பாற்றியதாக துபே தெரிவித்துள்ளார்.