உத்தரப் பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மக்கி என்னும் பகுதியில் பிறந்த பெண் சிசு குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்துள்ளது.
அவ்வழியாக சென்ற ஒரு பெண் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்குவந்த காவல் துறையினர் சிசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இதற்கு முன்பு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இதே மாவட்டத்தில் ஒரு பெண் குழந்தை குப்பைத் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.