தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடேங்கப்பா...ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையான 1 கிலோ டீ தூள்! - அஸ்ஸாம் தேநீர்

திப்ருகார்: அஸ்ஸாமில் நடைப்பெற்ற டீ தூள் ஏலத்தில், திக்கோம் தேநீர் நிறுவனம் 1 கிலோ டீ தூளை ரூ.75,000-த்திற்கு விற்பனை செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

கோல்டன் பட்டர்ஃப்ளை டீ தூள்

By

Published : Aug 13, 2019, 8:04 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 'தேநீர் நகரம்' என்றழைக்கப்படும் திப்ருகாரில், திக்கோம் ரோசல் டீ எஸ்டேட் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

கோல்டன் பட்டர்ஃப்ளை டீ தூள்

இதனிடையே கெளகாத்தியில் தேநீர் ஏல நிறுவனங்கள் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் டீ பொருட்களுக்கான ஏலத்தை நடத்துவது வழக்கம். இதில் தேநீர் நிறுவனங்கள் பங்குபெற்று, அந்நிறுவனங்களின் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்கின்றன.

இந்நிலையில் திக்கோம் ரோசல் டீ எஸ்டேட் நிறுவனத்தின் பிரசித்த பெற்ற கோல்டன் பட்டர்ஃப்ளை டீ தூள்(dikom golden butterfly tea) ஒரு கிலோ ரூ.75,000-க்கு ஏலத்தில் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. கடந்த ஏலத்தில் மைஜான் தேநீர் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, தங்களின் டீ தூளை ஒரு கிலோ ரூ. 70,500-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details