அரசுப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதை தடுப்பது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது போன்றவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் ஆகியோர் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.