தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம் - புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம்

புதுச்சேரி: மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம்!
புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம்!

By

Published : Jan 8, 2020, 2:39 PM IST

பொருளாதார நெருக்கடி, ஜனநாயக உரிமை பறிப்பு, மதவாத தாக்குதல் உள்ளிட்டவை குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, விசிக தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று பந்த் போராட்டம் நடைபெற்றது வருகிறது.

இதனையடுத்து ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, விசிக தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரி பேருந்து நிலையம் மறைமலை அடிகள் சாலையில் தொழிற்சங்கத்தினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம்!

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி புதுச்சேரியில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள்!

ABOUT THE AUTHOR

...view details