புதுச்சேரி அருகே மாத்தூர் கிராமத்திற்குள் வனப்பகுதியிலிருந்து வந்த புள்ளிமான் ஒன்று துள்ளிக் குதித்து விதிகளில் சுற்றித்திரிந்தது. இதனை அக்கிராமத்து பொதுமக்கள் வெகுவாக ரசித்து பார்த்தனர்.
மேலும் அது கிரமத்திலுள்ள வீதிகள், சிறுசந்துகளில் துள்ளிக் குதித்து ஓடியது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆச்சரியத்துடனும், களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென வீதியில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் புள்ளிமானை துரத்த ஆரம்பித்தது.
இதையடுத்து அங்கிருந்த சவுக்கு தோப்பிற்குள் புகுந்த மானை, நாய்கள் விடாமல் துரத்தி சென்றது. இதனால் கிராம இளைஞர்கள் மானைக் காப்பற்ற பின்னாலே ஓடியுள்ளனர்.