புதுச்சேரி வில்லியனூர் உறுவையாறு பகுதியில் அமைந்துள்ளது ஆச்சாரியா பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரிகளில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இருபாலர் படிக்கும் கல்லூரி என்பதால் அவ்வப்போது மாணவர்கள இடையே தகராறு வரும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி விடும் நேரத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுகூடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியானது.