நேற்று நடந்து முடிந்த ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்கு பதிவில் பீஹார் மாநிலம் முசாபர்பூரில், வாக்கு இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்படக்கூடும் என்பதால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மற்றும் இரண்டு ஒப்புகை சீட்டு கருவிகளை கூடுதலாக தேர்தல் அலுவலர் அவதேஷ் குமார், தன் பொறுப்பில் வைத்திருந்தார். இந்நிலையில் வாக்கு இயந்திரத்தின் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, அவை மாற்றப்பட்டன.
பீஹாரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விடுதியில் கைப்பற்றபட்டன
பாட்னா: முசாபர்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒப்புகை சீட்டு கருவிகளை தனியார் விடுதியில் இருந்து துணை ஆட்சியர் கைப்பற்றியுள்ளார்.
அதன் பின் கோளாறு ஏற்பட்ட இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உட்பட ஒரு கட்டுபாட்டு கருவி மற்றும் இரண்டு ஒப்புகை சீட்டு கருவிகளை அவதேஷ் குமார், தான் தங்கிருந்த விடுதிக்கு எடுத்து சென்றதாக, வாக்குச் சாவடி முகவரிகளின் மூலம் துணை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் விடுதியில் அதிரடியாக நடத்தப்பட்ட சோதனை குறித்து அலோக் ராஜன் தெரிவித்திருப்பதாவது, "விடுதி அறையில் அவர் இயந்திரங்களை திறந்து பார்த்து, முறைகேடு செய்ய முற்றப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டுள்ளது, இதுகுறித்து அவரிடம் விளக்கும் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார். மேலும் இதுகுறித்து கூடுதல் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.