தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாகம் தீர்க்க குடிநீரின்றி 15 குரங்குகள் உயிரிழந்த சோகம்! - வெயில் தாக்கம்

போபால்: ஜோஷி பாபா வனப்பகுதியில் வெயிலின் தாக்கத்தினால், குடிக்க தண்ணீர் இன்றி வாடிய 15 குரங்குகள் உயிரிழந்த சோகம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

தண்ணீர் பஞ்சம் 15 குரங்குகளின் உயிர்களை காவுவாங்கியது!

By

Published : Jun 9, 2019, 11:15 PM IST

மத்தியப் பிரதேசத்தில் பாகிலி தேவஸ் என்னும் கிராமத்தில் ஜோஷி பாபா எனும் வனப்பகுதி உள்ளது. குரங்குக் கூட்டம் அதிகம் நிறைந்த இந்த வனப்பகுதியில் மழையின்றி சுட்டெரித்து வரும் வெப்பத்தினால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குரங்குகள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றன.இந்நிலையில் குடிநீரில்லாமல் 15 குரங்குகள் உயிரிழந்துள்ளது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் கூறுகையில், "காட்டில் குரங்குகள் தனித் தனிக் கூட்டங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன. இதனால் ஒரு குரங்கு கூட்டம் தண்ணீர் குடிக்க செல்லும் இடத்தில், மற்றொரு கூட்டத்தை அனுமதிப்பதில்லை. இதன் விலையே இந்த குரங்குகளின் உயிரிழப்புக்கு காரணம். இறந்துப்போன குரங்குகளின் உடல் மூலம் மற்ற குரங்குகளுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க, இறந்த உடல்கள் பலவற்றை அப்புறப் படுத்திவிட்டோம். இன்னும் எஞ்சிய உடல்களை எடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details