தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தற்கொலைக்கு காரணம் மனைவிதான்...' - வைரலாகும் காவலரின் காணொலி! - உத்தரப் பிரதேச செய்திகள்

லக்னோ: சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலர் கடைசியாகப் பதிவு செய்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

என் தற்கொலைக்கு காரணம் மனைவிதான்...வைரலாகும் காவலரின் வீடியோ!
என் தற்கொலைக்கு காரணம் மனைவிதான்...வைரலாகும் காவலரின் வீடியோ!

By

Published : May 25, 2020, 10:41 PM IST

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் விஜய் கவுர். இவர் மீரட் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றினார். கடந்த மே மாதம் 11ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக பதிவு செய்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. சில நிமிடங்கள் பதிவான இந்த காணொலி, அவருடைய தற்கொலையின் பின்னணியில் இருக்கும் காரணத்தைக் கூறுகிறது.

தற்கொலைக்கு காரணம் மனைவிதான்... வைரலாகும் காவலரின் வீடியோ!

அதில், தன் மனைவியும், மனைவியின் உடன்பிறந்தவர்களும் அக்காவலரை மதிப்பதில்லை என்றும்; மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனை விவரிக்கும்போது, ஒரு காவல் ஆய்வாளர் தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தனது தற்கொலைக்கு உந்துதலாக இருந்தது என உடைந்த குரலில் பதிவு செய்துள்ளார்.

விஜய் கவுருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் அவருடைய மனைவி தாய் வீட்டிற்குத் திரும்பினார். இது குறித்து, கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், மன அழுத்தம் தாங்காமல் விஜய் கவுர் தற்கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க:பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details