பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் 100ஆவது நாள் நிறைவை முன்னிட்டு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
காஷ்மீர் விவகாரம்: பட்டேல் சரி; நேரு தவறு - ரவிசங்கர் பிரசாத் - மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்
அகமதாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சரியான அணுகுமுறையும், நேரு தவறான அணுகுமுறையும் கொண்டிருந்ததாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.
minister-ravi-shankar-prasad
அதில் பேசிய அமைச்சர், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய முன்னாள்உள் துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் சரியான அணுகுமுறையும் முன்னாள் பிரதமர் நேரு தவறான அணுகுமுறையும் கொண்டிருந்ததாக கூறினார். சிறப்புத் தகுதி வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம் வரலாற்றில் ஏற்பட்டிருந்த பிழை திருத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுப் பிழையை திருத்தி பெருமை கொள்ளச் செய்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார்.