தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் 50 ஆயிரம் தொலைபேசி தொடர்பு சேவை மீண்டும் இயக்கம்!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 50 ஆயிரத்துக்கும் மேல் தொலைபேசி தொடர்பு சேவை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமைச் செயலர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்

By

Published : Aug 18, 2019, 11:57 AM IST

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. அம்மாநிலத்தில் அதற்கு முந்தைய நாளிலிருந்தே தொலைபேசி, கைப்பேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி, புட்கம் (Budgam), சோனா மார்க், வடக்கு காஷ்மீர் பகுதிகளான உரி, குரேஸ், கஸிகண், பஹல்கம் உள்ளிட்ட தென் காஷ்மீர் பகுதிகளில் கடந்த 13 நாட்களாக தொலைபேசி தொடர்பு இல்லாமல் அம்மக்கள் அல்லல்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மீண்டும் 50 ஆயிரத்துக்கும் மேல் தொலைத் தொடர்பு சேவைகள் இயங்கப்படும் என்று அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு வார காலமாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள், ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வன்முறையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இச்சூழலில் தற்போது பதற்றமான சூழ்நிலை தணிந்துவருவதால், ஒவ்வொரு பகுதி வாரியாக வரும் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details