ஹெலிகாப்டர்களை போர்க்கப்பல் தளத்தில் இருந்து இயக்கப்போகும் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முதல் பெண் விமானிகள் என்ற பெருமையை உதவி - லியுடெனன்ட் குமுதினி தியாகி மற்றும் உதவி லியுடெனன்ட் ரித்தி சிங் பெறுகிறார்கள்.
முன்னதாக இப்பணிகளில் பெண்களை பணியமர்த்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்கள் தற்போது பணியமர்த்தப்பட்டிருப்பது போர்க்கப்பல்களில் முதன்மைப் பணிகளில் பெண்கள் மேலும் பங்கு வகிக்க தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.