தலைநகர் டெல்லியில் உள்ள ஃபார்ஷ் பஜார் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது தந்தையை (48) அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து, அதன் பின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
திட்டியதற்காக தந்தையை வெட்டி கொலை செய்த மகன் - மகன் தந்தையை வெட்டி கொலை
டெல்லி: 22 வயது இளைஞர் ஒருவர் தன் தந்தை திட்டி அடித்ததிற்கு அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
டெல்லியில் திட்டியதற்காக மகன் தந்தையை வெட்டி கொலை
இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை செய்த காரணம் குறித்து அவர் அளித்த வாக்கு மூலத்தில், என் தந்தை என்னிடம் அன்பாக நடந்து கொள்ளாமல் தினமும் திட்டியும், அடித்தும் கொடுமைப்படுத்தினார். இதனால் மனமுடைந்த நான் சம்பவத்தன்று கோபத்தில் தந்தையை கொலை செய்தேன் என கொலையாளி குறிப்பிட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.