தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் பேரணியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள்! - குடியுரிமை திருத்தச் சட்டம்

காந்திநகர்: சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் பேரணியில் வி.ஹெச்.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான உடைகளை அணிந்து பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

CAA supporters in Shivaji Jayanti
CAA supporters in Shivaji Jayanti

By

Published : Feb 19, 2020, 11:12 PM IST

இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட மாபெரும் மன்னர்களில் ஒருவர் சத்ரபதி சிவாஜி. ஆண்டுதோறும் இவரது பிறந்தநாளான பிப்ரவரி 19ஆம் தேதியை சிவசேனா, வி.ஹெச்.பி. உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல இந்தாண்டும் குஜராத் மாநிலத்தின் சூரத் மாநகரில், சத்ரபதி சிவாஜியின் 390ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்தப் பேரணியில் பல்வேறு வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் பேரணியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள்!

இந்தப் பேரணியில், காவி நிற உடை அணிவிக்கப்பட்ட 12 அடி உயர சத்ரபதி சிவாஜியின் சிலை எடுத்து வரப்பட்டது. இதில் பங்கேற்ற சிறுவர்கள் இந்து புராணங்களில் வரும் கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து வந்தனர்.

குஜராத்வாசிகள் மட்டுமின்றி மகாராஷ்டிராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ள சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான டி-சர்ட்டுகளை வி.ஹெச்.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிந்து வந்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிங்க: அமித் ஷா- அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details