மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன், மே.30ஆம் தேதி ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதியோருக்கு ஓய்வூதிய பணத்தை உயர்த்தும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். தற்போது பல்வேறு அதிரடி திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார்.
ஆந்திராவில் 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
அமராவதி: ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான 25 அமைச்சர்களுக்கு இன்று ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில் ஜெகன் தலைமையில் இன்று 25 அமைச்சர்களின் பதவியேற்பு விழா, ஆந்திர தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தர்மனா கிருஷ்ண தாஸ், பாட்சா சத்தியநாரயணன், விஸ்வரூப், பில்லி சுபாஷ் சந்திரபோஸ், சங்கர் நாராயணன், ஜெயராம், முளா புஷ்பா ஸ்ரீவானி உட்பட 25 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஈ.எஸ்.எல் நரசிம்மா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த அமைச்சரவையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவின் பெயர் இடம்பெறவில்லை. நேற்று எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த ஐந்து பேர் ஆந்திர துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடதக்கது.