கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் முதல்முறையாக மல்டி ஸ்பெஷாலிட்டி டெலி மெடிசன் வசதி தொடங்கப்பட்டுள்ளது. கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைமையில், பல்வேறு மருத்துவ சிறப்புத் துறைகள் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு ‘கூடே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த 'கூடே' டெலிமெடிசன் சேவையின் சுவரொட்டியை வயநாடு மாவட்ட ஆட்சியர் அதீலா அப்துல்லா வெளியிட்டார். நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் வீட்டிலிருந்தபடியே இந்த ’கூடே’ சேவையை பயன்படுத்தி மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம்